Wednesday, December 22, 2010

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு



சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

1 Comment:

PRAVIN.T said...

இந்த பாடலை எழுதியவர் கவிபேரரசு வைரமுத்து ...மற்ற எல்லா பாடல்களுக்கும் பாடலாசிரியரின் பெயர் தெரிந்தால் தயவு செய்து அதையும் பதிவு செய்யுங்கள்....

Last 25 songs posted in Thenkinnam