Thursday, December 30, 2010

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்



அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)

காற்றும் கூட எங்களுடன்
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழை துளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்
நத்தை கூட்டின் நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்
காத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்
தாயின் மடியில் தினம் இருந்து
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து
சொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்
ஐந்தெழுத்து புது ஒளியை
அறிய வைத்தாள் என் அன்னை
அண்ணன் தங்கை இருவருமே
நேசம் கொண்டு தமிழ் மன்னை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி பட்டால்
பத்து கண்ணிலும் வழி கண்டோம்
பள்ளிக்கூடம் தந்ததில்லை
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நாங்கும் சொன்னதில்லை
எங்கள் கதை போல வேறொன்றை
கண்களும் நீர் துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை
கறுப்பா சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளத்ததில்லை
சேகத்து வைப்பதற்க்கு தேவை இன்று எதுவுமில்லை
இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)

படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
வரிகள்: சினேகன்

1 Comment:

சீனு said...

//அண்ணன் தங்கை இருவருமே//

அண்ணன் தங்கை ஐவருமே

Last 25 songs posted in Thenkinnam