அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
திரைப்படம் - கோயில் புறா
இசை - இளையராஜா
வரிகள்- புலமைப் பித்தன்
பாடியவர்கள் - இசையரசி பி.சுசீலா, உமா ரமணன்
Thursday, December 2, 2010
அமுதே தமிழே அழகிய மொழியே
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
எனக்காக இந்தப் பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அக்கா
நாகை சிவாவிற்கும் எனது நன்றி
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றி முத்துலெட்சுமி.
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
புலமை பித்தனின் வைர வரிகள் ,
பகிர்ந்தமைக்கு நன்றி
அருண்
கலக்கல் பாட்டு,அடிக்கடி வானொலியில் ஒலிபரப்புவது
Post a Comment