Monday, December 27, 2010

மன்மதன் அம்பு - கமல் கவிதைகண்ணோடு கண்ணை கலந்தாலென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைக்கோர்தாளா ?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்தது பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினலாயின்
காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமேன்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாககொள்

கூட்டல் ஒன்றே குறி என்றானப்பின்
கழிவது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் ?
யோசிக்காமல் வருவதை எதிர் கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவே எனகொள்

காமம் எனப்படும் பண்டை செயலில்
காதல் கலவாது காத்துக் கொள்

இப்பெண்ணுரைகேதிறாய் ஆணுறை ஒன்றை
ஏற்ற துணியும் அணி சேர்த்துகொள்

கமல்: aaha…
இயற்ற துணியும் அணி செர்துகனுமா ?
துணிவே அணியும் துணை என்றானபின்
அணியொன்று எதற்கு? தனியே வருவேன் …

த்ரிஷா: அப்படி வாங்க வழிக்கு. So நீங்க கவிஞர் தானே ?

கமல்: guilty as accused.
த்ரிஷா: அப்போ judgement சொல்றேன்
கமல்: hmm…சொல்லுங்க
த்ரிஷா: பதிலுக்கு ஒரு கவிதை சொல்லுங்க. அதுதான் தண்டனை

கமல்: யாருக்கு ??? !!!
த்ரிஷா: அது கவிதைய கேட்டாதானே தெரியும்
கமல்: ha ha ha….அதுவும் சரிதான்
ஆனா, நீங்க கோவிச்சுக்க கூடாது
த்ரிஷா: ஏன்… பெண்களை பத்தி கேலியா ?
கமல்: ச்ச ச்ச… இது ஒரு பெண்ணுடைய வேண்டுதல் மாதிரி
ஒரு பெண் தெய்வத்துகிட்ட பாடுற தோத்திர பாடல்

த்ரிஷா: ohh நீங்க பக்தி மானா ?
கமல்: அதெல்லாம் இல்லேங்க, நான் புத்தி மானங்கரதே கேள்விகுறியா இருக்கு…
த்ரிஷா: கவிதைய கேட்டா கேள்வி குறி ஆச்சர்ய குறியா மாறாலாம் இல்லையா
கமல்: hmmm.. may be.. may I?
த்ரிஷா: Please

கலவி செய்கையில் கத்தில் பேசி
கனிவாய் மெலிதாய் கழுத்தைகவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்ந்தது போல
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காம கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றவன் உதவிட வேண்டும்
சமையலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட திண்தோள் வேண்டும்

மோதி கோபம் தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தையும்

மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
மேடாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கி புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படி கணவன் வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலக்ஷிஎன
கடும் நோன்பு முடிந்தும் தேடி போனேன்

த்ரிஷா: தேடி எங்க போனா அந்த பொண்ணு
கமல்: பீச்சுக்குதான்

பொடி நடை போட்டே இடை மெலியவென
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மண துறவிகள் கூடிட கண்டேன்

த்ரிஷா: எங்க? tv’ லையோ ?
கமல்: issshhhhhhhh

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன்
சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று
வேற்று மதம் வரை தேடி போனேன்
வரவர புருஷ லக்ஷணம் உள்ளவர்
திருமண சந்தையில் மிகமிக குறைவு

வரம்தர கேட்ட வரலக்ஷ்மி உனக்கு
வீட்டுகாரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது ?
உறங்கி கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்குமுண்டோ ?

உனக்கேனுமது அமையபெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையசெய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே...

படம்: மன்மதன் அம்பு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல் ஹாசன், த்ரிஷா
வரிகள்: கமல் ஹாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam