தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
(தாயிற்)
தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(தாயிற்)
பொறுமையிற் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோவிலில் ஒன்று .. குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று
(தாயிற்)
பாடியவர் : T.K.கலா
திரைப்படம்: அகத்தியர்
இசை:குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள் : பூவை செங்குட்டுவன்
கோமதிம்மாவின் தாய் வீரலெட்சுமியின் ( எனது ஆச்சி) நினைவு நாளுக்காய் கோமதிம்மாவின் நேயர் விருப்பமாக இப்பாடல் ஒலிக்கிறது .
Sunday, December 5, 2010
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அன்பு கயல்விழி,நான் கேட்ட பாட்டு போட்டு என் விருப்பத்தை பூர்த்தி செய்த உனக்கு நன்றி.
ஆச்சியின் பூரண ஆசிகள் உனக்கு கிடைக்கட்டும்.
என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
நல்ல பாடல்க்கா
ஆச்சியின் ஆசிகள் எப்போதும் கிடைக்கும் என நம்புவோம்
Post a Comment