நண்பா நண்பா காதல் நண்பா
இரவில் பகலும் ஏதடா
பூவும் பெண்ணும் இதழ்கள் திறக்கும்
இதயம் திறப்பது ஏதடா
(நண்பா..)
உன் பேரை கேட்கும் டிசம்பர் பூவெல்லாமே
உதிர்ந்து போகும் என் போல்
கண்ணாடி மேகம் தனிமை தாங்கிடாமல்
நகர்ந்து போகும் என் போல்
எந்தன் வானில் பெய்த தூரலில்
வானவில் வந்து சேர்ந்ததே
தென்றல் வெயில் வந்த மாயம்
ஓடி போகிறதே
என் ஜன்னல் கதவை சேர்ந்த கடிதம்
எந்தன் கைவசம் வந்ததே
பெயர்கள் மாறி சேந்ததால்
அது கைகள் மாறியதே
பூமியில் வீசும் பூந்தென்றல் காற்று மெல்ல
நிலாவில் வீசும் ஓஹோ
சொல்லாத நேசம் இல்லாமல் போன பின்னே
நெஞ்சோடு பேசுமோ
கண்ணொடு பார்த்தேன் காற்ற் என்றால்
யாரும் நம்பிட கூடுமோ
நெஞ்சோடு சேர்ந்தேன் உன்னை என்றால்
வாழ்க்கை வழி விடுமோ
எப்போதும் போல நானும் வாழ
நாட்கள் எண்ணியும் மாற்றுமோ
வாராத ஒன்று இந்த பூமியில்
வாழ்த்தல் சாத்தியமோ
உன்னோடு பேசி சந்தித்த ஞாபகங்கள்
நெஞ்சோடு தூங்குவேன்
காதோடு ஏதோ நீ சொன்ன வாசகங்கள்
அங்கங்கே கேட்குமே
(நண்பா..)
படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்: குணால்
வரிகள்: பா. விஜய்
Tuesday, December 28, 2010
நண்பா நண்பா காதல் நண்பா
பதிந்தவர் MyFriend @ 1:36 AM
வகை 2000's, குணால், பா. விஜய், ரஞ்சித் பரோட்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment