Tuesday, November 13, 2012

மச்சான பாத்தீங்களா


என் மச்சான மச்சான
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே

வெள்ளி சரம் புன்னகையில் அல்லி வச்சேன் காணலியே
நான் அல்லி வச்சேன் காணலியே
ஊர்க்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் காட்டில் தனியாக அவரை பார்த்தா தான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே

பச்ச பிள்ளை போல் அவர் பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
பச்ச பிள்ள போல் அவர் பாத்து நிக்க
இச்ச கொடியாட்டம் நான் பாத்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள
கஸ்தூரி கலை மான்களே அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டதில் அவர பாத்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே

கல்யாணம் பேசி கண்டாங்கி சேல
தந்தாக்க என்ன மாட்டேன்னு சொல்வேன்
கல்யாணம் பேசி கண்டாங்கி சேல
தந்தாக்க என்ன மாட்டேன்னு சொல்வேன்
புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக
மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக
தல வாழ எல போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க
தல வாழ எல போடுங்க ஊரவிருந்துக்கு வர சொல்லுங்க
பூ போட்டு மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசாற வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்

படம் : அன்னக்கிளி (1976)
இசை : இளையராஜா
பாடியவர் : ஜானகி
வரிகள் : வாலி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத பாடல்...

Last 25 songs posted in Thenkinnam