Saturday, November 3, 2012

வாராயோ தோழி வாராய்



வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி

அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி

ஏய் வாடி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி

ஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைப்பூசி மாத்திக்கோ

அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதி போச்சு

கிளிண்டன் நம்பர் போட்டு தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லி விடு

யார் நீ என்றால் மிஸ் வேல்ட் அல்ல மிஸ் ஒல்ட் என்றே சொல்லி விடு

வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி

கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு

எம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு

டூ பீஸ்சு உடை போட்டு சன் பாத் எடு பாட்டி
டிஸ்னிலேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவு கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு வடை சுட்டு விக்கனும் ஒருவாட்டி

வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி

அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி

வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி

படம் : ஜீன்ஸ் (1998)
இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : சோனு நிகம், ஹரிணி, சாகுல் ஹமீது, சங்கீதா
வரிகள் : வைரமுத்து

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹிட்டான பாடல்...

பாடல் வரிகளுக்கு நன்றி...

சீனு said...

//யார் நீ என்றால் மிஸ் வேல்ட் அல்ல மிஸ் ஆல் என்றே சொல்லி விடு//

யார் நீ என்றால் மிஸ் வேல்ட் அல்ல மிஸ் Old என்றே சொல்லி விடு

Last 25 songs posted in Thenkinnam