Tuesday, November 20, 2012

துப்பாக்கி - அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே

அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெங்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்

ஏ நிஷா நிஷா நிஷா
 ஓ நிஷா நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

ஏ நிஷா நிஷா நிஷா
 ஓ நிஷா நிஷா நிஷா

அழகளந்திடும் கருவிகள் செயல் இழந்திடும் அவளிடம்
அணு இலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் குவியலில் மழை சரிவுகள் தோற்ப்பதால்
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்
அவள் மேலே வெயில் விழுந்தால் நிலவொளியாய் மாறிப்போகும்
அவள் அசைந்தால் அந்த அசைவிழும் இசை பிறக்கும்

அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெங்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்

தட தடவென ராணுவம் புகுந்திடும் ஒரு சாலையாய்
அதில் உடன் நுழைந்தாயடி என்னில்
இரு விழிகளும் குழலிலலே பட படவென வெடித்திட
இருதரம் துடித்தாயடி கண்ணில்
உன்னை போலே ஒரு பெண்ணை காண்பேனா என்று வாழ்ந்தேன்
நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்

அண்டார்ட்டிக்கா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்
நீ பெங்குயினா பெண் டால்பினா ஏன் குழம்புது கொஞ்சம்

ஏ நிஷா நிஷா நிஷா
 ஓ நிஷா நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

படம் : துப்பாக்கி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : விஜய் பிரகாஷ், கிரீஷ், ராஜீவ், தேவன்
வரிகள் : மதன் கார்க்கி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்...

பாடல் வரிகளுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam