Wednesday, November 21, 2012

மொச்ச கொட்ட பல்லழகி

மொச்ச கொட்ட பல்லழகி
முத்து முத்து சொல்லழகி
சீமையிலே பேரழகி செஞ்சி வச்ச மாரழகி
அப்படி போடு

மொச்ச கொட்ட பல்லழகி
முத்து முத்து சொல்லழகி
மொச்ச கொட்ட பல்லழகி
முத்து முத்து சொல்லழகி
சீமையிலே பேரழகி செஞ்சி வச்ச மாரழகி
கொழுந்து வெத்தல தரட்டா ஒன் குடுமி மட்டும் தொடட்டா
கொழுந்து வெத்தல தரட்டா ஒன் குடுமி மட்டும் தொடட்டா

தூண்டி முள்ளு கண்ணழகா தூரத்திலே பேரழகா
தூண்டி முள்ளு கண்ணழகா தூரத்திலே பேரழகா
ஆண்டிப்பட்டி ஆணழகா மூக்கு மட்டும் கொட மொளகா
கொழுந்து வெத்தல தருவ நீ கொல்ல பக்கம் வருவ
அட கொழுந்து வெத்தல தருவ நீ கொல்ல பக்கம் வருவ

ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி
ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க நீயும் வாடி
காள மாடு காணாம்னு காட்டு வழி நானும் வாரேன்
ஏரிக்கரை தோப்பு அங்கே இடமிருக்கு பாப்பு
ஏரிக்கரை தோப்பு அங்கே இடமிருக்கு பாப்பு

ஏரிக்கரை பக்கம் வந்தா எக்குதப்பா நீ நடப்ப
ஏரிக்கரை பக்கம் வந்தா எக்குதப்பா நீ நடப்ப
கெண்டை சிரிக்கி மக கெழுத்தி மீன நீ புடிப்ப
எட்டி தான நில்லு எகிறி போகும் பல்லு
எட்டி தான நில்லு எகிறி போகும் பல்லு

ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா
ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா

வண்டி தடத்து வழி மழ தண்ணி ஒடுமடி
வண்டி தடத்து வழி மழ தண்ணி ஒடுமடி
பாத தடத்து வழி பாவி மனம் போகுதடி
பாண்டிக்குடி தேனே உன்னை தாவி புடிப்பேனே
பாண்டிக்குடி தேனே உன்னை தாவி புடிப்பேனே

மொற பொண்ணு குத்த வச்சி மூலையில சமஞ்சிருக்கா
மொற பொண்ணு குத்த வச்சி மூலையில சமஞ்சிருக்கா
அடுத்த வீட மோப்பம் விடும் ஆம்பளைக்கு அறிவிருக்கா
ஒடி போயா வழுக்க இவ உசிலம்பட்டி ஒலக்க
அட ஒடி போயா வழுக்க இவ உசிலம்பட்டி ஒலக்க

உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள
உள்ளுக்குள்ள புழுங்குதடி உச்சந்தலை வேர்க்குதடி
உள்ளுக்குள்ள புழுங்குதடி உச்சந்தலை வேர்க்குதடி
கும்பகரை பக்கம் தானே குளிக்க போவோம் ரெண்டு பேரும்
சீயக்காயும் தாரேன் நான் தேச்சி விடவும் வாரேன்
சீயக்காயும் தாரேன் நான் தேச்சி விடவும் வாரேன்

சீயக்கா பொடி இருக்கு தேச்சி விட ஆளிருக்கு
சீயக்கா பொடி இருக்கு தேச்சி விட ஆளிருக்கு
குளிக்கையில அழுக்கானா குமரிக்கொரு வழி இருக்கா
சூடு ஏறி போச்சு இது சுத்தி வளைக்கிற பேச்சு
சூடு ஏறி போச்சு இது சுத்தி வளைக்கிற பேச்சு

ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா
ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா

புத்தி கெறங்குடி பொழுது கொஞ்சம் மசங்குதடி
புத்தி கெறங்குடி பொழுது கொஞ்சம் மசங்குதடி
பிச்ச கேட்ட மச்சானுக்கு எச்சி தண்ணி ஊத்திக் கொடு
யான பசி எனக்கா அடி சோள பொறி இருக்கா
யான பசி எனக்கா அடி சோள பொறி இருக்கா

சண்டையிட்டு கேட்ட மச்சான் மண்டியிட்ட மாயம் என்ன
சண்டையிட்டு கேட்ட மச்சான் மண்டியிட்ட மாயம் என்ன
தேரு கொண்ட மச்சான் தெக்க இப்ப நின்னதென்ன
அப்படி வாயா வழிக்கு நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி
அப்படி வாயா வழிக்கு நான் தொலக்கி வைக்கனும் தொலக்கி

ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா
ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி கும்மா
காளி மச்சினி கம்மா
கூலி மச்சினி கும்மா காளி மச்சினி கம்மா

வகை :  நாட்டுப்புற பாடல்கள் / கிராமிய பாடல்கள்
ஆக்கம் : தெக்கம்பட்டி சுந்தர்ராஜன்

5 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்... வரிகள் அருமை...

நன்றி...

கவிதா | Kavitha said...

செம.... :)

Unknown said...

Nice song 😍😍😍

Unknown said...

Hiiii

Anonymous said...

Hi supper

Last 25 songs posted in Thenkinnam