Friday, November 9, 2012

செவ்வானம் வெட்கம்


பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

வானகம் தூரம் இல்லை வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டம் இட்டு தன்னை தானே சுற்றும் பூமி
நம்மைச் சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

படம் : பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ஸ்ரீனிவாஸ்
வரிகள் : பழனிபாரதி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த பாடல் + வரிகள்...

நன்றி...

Last 25 songs posted in Thenkinnam