Sunday, August 8, 2010

கற்றது களவு - இந்த வானம் இந்த பூமி நமக்காக

இந்த வானம் இந்த பூமி நமக்காக
இந்தக் காற்றும் இந்த மழையும் நமக்காக
எந்த ஊரும் சொந்த ஊரே நமக்காக
எந்த நாளும் நல்ல நாளே நமக்காக
விலகாத ஆசை கேட்காத ஓசை
புரியாத பாஷை நமக்காக
முடியாதக் கனவு விடியாத உறவு
நமக்காக நமக்காக ஹோ
(இந்த வானம்..)

நீ உன்னை மட்டும் என்றால் என்னை விட்டுப்போயி
நம் பொய்யும் கூட நன்மை செய்யும்
நெஞ்சுக்குள்ள வைய்யி

ஓஹோ இனி கண்ணைக் காணச்செய்யாமல்
கையை வீசிச்செல்லாமல் காலம் வந்து சேரும்
என்று நம்புவது சிக்கல்
ஒரு எல்லைக்கோடு இல்லாமல்
தப்பு ஏதும் செய்யாமல் நீ நீந்திப்போல ஆசைப்பட்டால்
கவிழ்ந்துவிடும் கப்பல்
தவறாலே பிறந்தது உலகம்
அதுதானே மனிதனின் சரீரம்
உயிர் வாழ நடப்பதுக்கலகம்
பொருள் திருடுவதும் திறமை என அறிந்து அறிந்து
திசை முழுவதையும் அளந்திடுவோம் பறந்து பறந்து
(இந்த வானம்..)

ஓ ஒருக்கட்டுக்காவல் நீங்காமல்
காதல் கொள்ள எண்ணாமல்
சட்டம் பேசி நிற்க்கும்போது கண்டுக்காது ஊரு
சிறு வட்டத்துக்குள் நிற்காமல்
நீதி ஞாயம் பேசாமல்
திட்டம் போட்டுத்தீங்க செஞ்சால் வந்து சேரும் பேரு
அலைப்பாயும் மனம் ஒரு குரங்கு
அதற்காக அனுதினம் பிறந்து
வழிமாறி இரசனையில் மொய்த்து
மனை உடைந்துவிடும் சிறு உளியில் அடிக்க
விதைத்து விதைத்து விடும் அனுபவங்கள் செழிக்க செழிக்க
(இந்த வானம்..)

படம்: கற்றது களவு
இசை: விநாயக் மனோகர்
பாடியவர்கள்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம், ஹரிதா, லயா, சுப்ரியா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam