Saturday, August 14, 2010

மாஞ்சா வேலு - ஊரில் உள்ள உயிர்களெல்லாம்



ஊரில் உள்ள உயிர்களெல்லாம் உறவாலே வாழுது
உறவில்லாத வாழ்க்கை என்றும் உதவாமல் போவுது
நண்பர்கள் போலவே நாளெல்லாம் பேசுங்கள்
உறவு என்னும் பாடல் ஒன்று ஓயாமல் பாடுங்கள்
(ஊரில்..)

சிறு சிறு மனஸ்தாபம் வரும்
சிவந்த கண்ணில் கோபம் வரும்
உறவுகள் அதில் போனதில்லை
வானம் இரண்டு ஆவதில்லை
தூறல் நின்னுப்போனப்பின்னும்
தூவானம் சிரித்திருக்கும்
சின்னச்சின்னப் பூசல்களும்
சில நேரத்தில் தீர்ந்துவிடும்
(ஊரில்..)

தினம் தினம் ஒரு புன்னகையை
இதழின் ஓரம் பொங்கிவிடு
புதுப்புது விதப்பொற்க்கனவை
இமைகள் ஓரம் தங்கிவிடு
அன்பு என்னும் மந்திரத்தை
அதிகாலையின் ஓதிவிடு
ஒற்றுமைக்குக் கேடு வந்தால்
உதவாதென ஒதுக்கிவிடு
(ஊரில்..)

படம்: மாஞ்சா வேலு
இசை: மணிஷர்மா
பாடியவர்: கார்த்திக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam