Tuesday, August 17, 2010

கனிமொழி - யாரோ இவள் இவள் யாரோ



யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ
(யாரோ..)

என் காதல் என்னாகுமோ சொல்லாமலே நாள் போகுமோ
உன் காதல் நீ சொல்லடா ஏன் இந்தக் கூச்சம்
தன் காதில் நான் சொன்னதை பூங்காற்றுமே போய் சொல்லுமோ
வேண்டாம் உன் தூண்டாடுதே ஓர்ப்பார்வை போதும்
உன் பார்வை கல்லாகுதே என் கால்கள் தள்ளாடுதே
கொண்டாடு கொண்டாடு அன்பே
தேணுண்ட வண்டாகிறேன்
நீ தூண்ட தேன் ஆகிறேன்
கொண்டாடு திண்டாடு அன்பே ஹே ஹே ஹே
(யாரோ..)

காற்றோடு நான் கேட்கிறேன் உன் வாசனை மூச்சாகுமோ
உன் சுவாசக்காற்றோடுதான் என் வாசம் விடும்
கனவோடு நான் கேட்கிறேன் உன் காலடி தினம் கேட்குமோ
கனவென்னை நிஜமாகவே என் கைகள் தீண்டும்
ஹே ஹே உன் பாதி நானாகவே என் பாதி நீயாகவே
கொண்டாடு கொண்டாடு அன்பே
ஒருப்பிள்ளை அணைப்போடுதே மறுப்பிள்ளை எனைக்கூறுதே
கொண்டாடி திண்டாடு அன்பே ஹே ஹே ஹே
(யாரோ..)

படம்: கனிமொழி
இசை: சதீஷ் சக்கரவர்த்தி
பாடியவர்: முகேஷ், பெல்லா செண்டே, பார்த்தீவ் கோகில்
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam