Tuesday, August 31, 2010

மார்கழிப்பூவே மார்கழிப்பூவே



மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி..)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைப்பாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி..)

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுப்பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்
(வெண்பா..)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி..)
(வெண்பா..)

படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஷோபா சந்திரசேகரன்
வரிகள்: வைரமுத்து

2 Comments:

சீனு said...

//சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை//

சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை

சீனு said...

//வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்//

வசிப்பேன்(?)

Last 25 songs posted in Thenkinnam