Tuesday, July 6, 2010

கண்கள் உனது கண்கள்

கண்கள் உனது கண்கள் வலையை பிடிக்கும் மீன்கள்
ஒரு பார்வை யுத்தம் ஒன்று நடத்தி என்னை கொல்லுதே
மறு பார்வை பூக்கள் எடுத்து தொடுத்து என்னை கொஞ்சுதே
இவை இரண்டில் என்னை பறித்தாயே சிறையோடு அடைத்தாயே
(கண்கள்..)

வானவில் வண்ணம் கருப்புதான் உன் புருவத்தில்
வளைக்கிறாய் அதை வளைக்கிறாய் நீ கர்வத்தில்
உலகத்தில் உள்ள மொழிகளில் எது சிறந்தது கேட்டேனே
விழிகளில் உன் விழிகள்ல் அது இன்று தான் உணர்ந்தேனே
(கண்கள்..)

சிறு கதை போல் முடிவதும் உன் கண்களே
தொடர்கதை போல் தொடர்வதும் உன் கண்களே
புத்தனை தந்த போதி மரம் தரும் கருணைகள் உன் கண்ணே
சித்ரவதை செய்யும் வதை முகம் தரும் அச்சமும் உன் கண்ணே
(கண்கள்..)

படம்: காதலே என் காதலே
இசை: பிரயோக்
பாடியவர்: கார்த்திக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam