Wednesday, July 28, 2010

மதராசப்பட்டிணம் - ஆறுயிரே ஆறுயிரே



ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்
(ஆறுயிரே..)

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்
(ஆறுயிரே..)

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam