Thursday, July 15, 2010

நான் முதன் முதல் பாடிய பாட்டு




படம்: தாய்நாடு
பாடியவர்கள்:டி.எம்.எஸ்., பி.சுசிலா
நடிகர்கள்:சத்யராஜ்,ராதிகா
இசை:மனோஜ்கியான்

Get this widget | Track details | eSnips Social DNA


நான் முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா?
இருண்ட வாழ்வும் இனி மாறும் (நான்)


போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

கேள்விகள் விடை பெற வேண்டும்
அந்த விடைகளில் புதுயுகம் தோன்றும்

கேட்க மறந்த மனிதா - உன்
ஊமை வாழ்வும் இனிதா?

அழுதபவன் சிரித்திட வேண்டும்
அந்த சிரிப்பினில் சமத்துவம் தோன்றும்

சிரிக்க மறந்த மனிதா
நீ சுமக்கும் பாரம் பெரிதா

தாங்காது இனி தாங்காது - இங்கு
போராட்டம் காணவா

நீ முதன் முதல் பாடிய பாட்டு
இங்கு ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதா
இருண்ட வாழ்வும் இனி மாறும்

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

கனவுகள் உயிர் பெறவேண்டும்
அது உயிர் பெறப் போரிட வேண்டும்

காலம் மீண்டும் வருமா
அது கனவை மீட்டுத் தருமா

சிறைகளும் உடை பட வேண்டும்
அதை உடைத்திட துணிவுகள் வேண்டும்

துணையும் மீண்டும் வருமா
அது துணிவை மீட்டுத் தருமா

போதாது இது போதாது
நீ போராட ஓடி வா (நான் )

3 Comments:

வில்லனின் விநோதங்கள் said...

சோ மெனி ஸ்பெல் மிஸ்டேக்ஸ். ரொம்ப கடுப்பாகுது பாஸ். நல்ல பாட்டு.
கொஞ்சம் பார்த்து செய்யுங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாற்றியாச்சுங்க.. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

வில்லனின் விநோதங்கள் said...

வாவ். எதேச்சையாக இதை மீண்டும் பார்த்தேன். அப்புறம் இதே மாதிரி இரண்டு மூன்றூ பாடல்களுக்கு சொல்லியிருந்தேன். அது என்ன பாடல்கள் என்று மறந்து போச்சு,

Last 25 songs posted in Thenkinnam