மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
(மேகமே..)
பக்கிங்ஹாம் கால்வாயில் தண்ணீரா நம் கோயில்
அந்நாடும் வெளுத்துக்கட்டி வாழ்வோம்
அட ஹோய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே வேலை செய்வோம் வாய்யா
(மேகம்..)
சூரியன் உதிக்கும் போதே சாயம் போட போவோம்
அட்டுனு மழைத்துளி வந்தா
நாங்க தாயம் ஆடத்தான் போவோம்
வாடா வாடா வாடா தாயம் ஆறு
வாடா வாடா வாடா ஒரே ஒரு தாயம், ஈறாறு
வாடா வாடா வாடா ஒரே ஒரு புள்ளி ச்சே
நாங்க நொண்டி கழுதைப்போல
நூறு மூட்டைப்போல வாழ்க்கை வருத்தும் போது
நாங்க வானம் தேடித்தான் போவோம்
சலவைக்காரன் வாழ்க்கைக்கூட சாமியைப்போலத்தான்
உங்களோட பாவம் மூட்டை சொமப்போம்
அழுக்கோட வாழ்ந்தாலும் நம் நெஞ்சில அழுக்கில்ல
ஆகாசம் போல மனசு வெள்ளை
அட ஹோய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே
வேலை செய்வோம் வாய்யா
ஆ வாய்யா
கையில காசு இல்ல
மனசுல வேஷம் இல்ல
பொய்யில வாழ்க்கையே இல்ல
அதனால கஷ்டம் நஷ்டம்தான் இல்ல
ஏ சார் துரை
உன் சட்டை கரை
என் கிட்ட வர
உட்டேன் பார் அறை
பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு ஒதுங்கினது இல்ல
அனுபவம் பாடம் படிச்சோம்
அதனால் வாழ்வில் தோல்வி இல்லை
எம்டிப்போட்ட உண்டைப்போல வருமே சில நேரம்
பதுங்கிப்பாஞ்சி அடிக்கும் போதும் பயமில்ல
வயசாகிப்போனாலும் தன்மானம் சாயாது
மண்ணோட ஈரம் போல வாழ்வோம்
அடப்போய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே
வேலை செய்வோம் வாய்யா
வாய்யா..
(மேகமே..)
படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: MS விஸ்வநாதன், விக்ரம், நாசர்
வரிகள்: நா. முத்துக்குமார்
Friday, July 23, 2010
மதராசப்பட்டிணம் - மேகமே ஓ மேகமே
பதிந்தவர் MyFriend @ 1:57 AM
வகை 2010, GV பிரகாஷ் குமார், MS விஸ்வநாதன், நா. முத்துக்குமார், நாசர், விக்ரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment