மேகங்கள் எல்லாம் சேர்ந்து வரிசையிலே
இங்கே வருகிறதே பூ மாலை ஏனோ தூவ
ஊரெங்கும் வீசுகின்ற காற்றினிலே
ஒரு குளிர்ச்சி இல்லை
இந்தப் பாசத்தைப்போல..
பச்சைக்கிளிப் போல போவோமே மேலே
பன்னீர்த்துளிப் போல விழுவோமே கீழே
பச்சைக்கிளிப் போல போவோமே மேலே
பன்னீர்த்துளிப் போல விழுவோமே கீழே
அன்புக்கு இலக்கணம் ஆன சொந்தம் இங்கே உண்டு
என் வீட்டில் அழகைக்காண போதவில்லை கண்கள் ரெண்டும்
பம்பரம் போலே இங்கே பாசம் வந்து சுற்றுகின்றதே
பாசத்தின் பள்ளிக்கூடம் போல் எங்கள் வீடு உள்ளதே
(மேஅங்கள்..)
அழகான நெஞ்சம் அன்புக்கா பஞ்சம்
தழுவிட மறந்ததில்லை உறவுகள் கொஞ்சம்
பொழுதினில் வீசும் வெயிலுக்குள் சூடு இல்லை
எதிர்ப்பாராதேதோ முத்தம்
எப்போதும் இங்கே கிட்டும்
வாழுமே எங்கள் பாச்ம
வானம் பூமி உள்ள மட்டும்
மண்ணள்ளி கையில் நாங்கள் வைத்தால் கூட
தங்கமாகுமே..
திட்டினால் வார்த்தைக்கூடத் தித்திப்போடு
எல்லைக்காட்டுமே
ஆராரோ சொல்லும் இங்கு அருகினிலே என்னுயிரினிலே
ஏதேதோ சொல்வதாரோ
கோடான கோடி பாடல் பெரிதில்லையே
அன்பின் பிழையினிலே
வாழ்ந்தாலே இன்பமாகுமே..
நடமாடும் தெய்வம் அன்னைக்கும் முன்னால்
காயங்கள் வலிப்பதில்லை
நாத்திகம் கூட வணங்கிடும் கடவுள்
தாயன்றி வேறு இல்லை
பல்லக்கில் ஏறி போகின்ற சாமி
என்னோட அன்னை சாய கொண்டு இன்று புன்னகைக்குதே
என்னோட தேகம் எங்கும்
ஆனந்தத்தின் பூக்கள் பிக்குதே
(மேகங்கள்..)
படம்: அய்யனார்
இசை: தமன்
பாசியவர்: ராகுல் நம்பியார்
Tuesday, July 27, 2010
அய்யனார் - பச்சைக்கிளிப் போல
பதிந்தவர் MyFriend @ 1:59 AM
வகை 2010, தமன், ராகுல் நம்பியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//பாசியவர்: ராகுல் நம்பியார்//
அப்ப பாடினது யாரு? :)
Post a Comment