என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்ததன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்ததந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே
சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே உள்தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
(என் நெஞ்சில்..)
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்க்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்றோ
இன்று புரிந்ததேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்
(என் நெஞ்சில்..)
படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சாதனா சர்கம்
வரிகள்: நா. முத்துக்குமார்
Wednesday, July 21, 2010
பானா காத்தாடி - என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்
பதிந்தவர் MyFriend @ 1:09 AM
வகை 2010, சாதனா சர்கம், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
ஆஹா செம ஸ்பீடுல போய்க்கிட்டிருக்கா இங்கே இப்பத்தான் பாட்டை கண்டுபுடிச்சுட்டு வாரேன் இங்கே அல்ரெடி இருக்குது! சூப்பரேய்ய்ய்ய்! :))
Post a Comment