Monday, July 26, 2010

நதியில் ஆடும் பூவனம்

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம் (நதியில்)
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்(நதியில்)

(நதியில் ஆடும்)

குளிக்கும்போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் ஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை
அம்பு தொடுக்கும்பொது நீ துணை சோதனை

(நதியில் ஆடும்)

ஸரிநிஸா பாமரிகா
ஸரிநிஸா பாமரிகா
ததபமா
மதநிஸா நிதபம
மதநிஸா

ஸாஸஸாஸ ஸஸரிநிநிதத
தாததாத ததநி பபதத

ரிமாதநி தபநித
ரிஸநிதபாமக
தாபம நிதப
ஸாநிதப ஸஸரிரிககமமபப
ஸாஸநிநிததபபம
நிரிகமாப

சலங்கை ஒசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
உதயகானம் பொதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்தை கேட்குமே
ஒரு விலங்கு விழித்து பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை போதுமே பொதுமே.....

(நதியில் ஆடும்)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடல்வரிகள் : வாலி
பாடியவர்கள் :ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை இளையராஜா
படம் காதல் ஓவியம்

9 Comments:

கோபிநாத் said...

சூப்பரு ;)

ஆயில்யன் said...

ஆஹா சூப்பரூ தேடி புடிச்சு கொண்டு வந்து போட்டு பலரையும் நினைவலைகள் அடிச்சுக்கிட்டு போய் இளமை காலத்தில நிறுத்துற மாதிரி பாட்டுக்கள் :))

அந்த ஸரிநிஸ பாமரிகா ப்ளோவுல வரிகளை காட்ச் புடிச்சதுக்கு எம்புட்டு டைமாச்சு :))

Thekkikattan|தெகா said...

செம பாட்டு! மீண்டும் இங்கு கொண்டு வந்து மகிழ்ச்சி கொடுத்தமைக்கு நன்றி... :)

☼ வெயிலான் said...

திரும்பத் திரும்ப கேட்டாலும் சலிக்காத பாடல். நன்றி!

உண்மைத்தமிழன் said...

மனதை விட்டு நீங்காத பாடல்.. முத்தக்காவுக்கு நன்றி..!

Thamiz Priyan said...

இந்த படத்தில் இருக்கும்பாடல்கள் அற்புதம்.. படம் தான் சொதப்பல்..:)

panguvanihan said...

//உதயகானம் பொதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊருமே//

உதயகானம் போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே

சென்ஷி said...

ஆஹா.. அழகு :))

ஸ்வர சுத்தமாய் ஏற்றிவிட்டீர்கள் போல !

ஹேமா said...

மிகமிகப் பிடிச்ச பாட்டு.எந்தப் பாடல்களுமே S.P.B ,ஜானகி குரல்கள் கலந்துவிட்டால்...
சொல்லவே வேண்டாம்.நன்றி உங்களுக்கு.இப்போ மட்டும் 3 - 4 தரம் கேட்டிட்டேன் !

Last 25 songs posted in Thenkinnam