Tuesday, December 11, 2012

வானத்தை பார்த்தேன்



வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே

வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்லே
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே

குரங்கிலிருந்து பிறந்தானா
குரங்கை மனிதன் பெற்றானா
யாரை கேள்வி கேட்பது நாதில்லையே
கடவுள் மனிதனை படைத்தானா
கடவுளை மனிதன் படைத்தானா
ரெண்டு பேரும் இல்லையே 
ரொம்ப தொல்லையே
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை

வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பலநாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல

சில நாள் இருந்தேன் கருவறையில்
பல நாள் கிடந்தேன் சிறையறையில்
அம்மா என்னை ஈன்றது அமாவாசையாம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டப்பாடு யாவுமே பாடந்தானாடா
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
இல்லை போராட்டமே வாழ்க்கை

வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தை பார்த்தேன் பூமிய பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல 
அந்த நிம்மதி இங்கில்ல


படம் : மனிதன் (1987) 
இசை : சந்திரபோஸ் 
பாடியவர்: பாலசுப்ரமணியம் 
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam