Wednesday, December 26, 2012

உன்ன விட இந்த உலகத்தில்



உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்ன சரி வர புரிஞ்சிக்க யாருமில்லை எவருமில்லை
உன்ன விட
என்ன விட

அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் கொளத்து உடும்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பாரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா
உன்ன விட

காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி
போத்திகிற நமக்கு அது மூடு துணி
உன்ன விட

ஒங்கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய
என்ன கேட்குற சாமிய
நூறு ஜென்மம் உன் கூட
போதுமா
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய
காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கனும்இருக்கணும் கலக்கணும்

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை
வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

படம் : விருமாண்டி (2004)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கமல்ஹாசன், ஸ்ரேயா கோஷல்
வரிகள் : கமல்ஹாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam