Friday, December 21, 2012

நெஞ்சுக்குள்ள - கடல்



நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெல்லப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமா குனியலையே! குனியலையே!
குடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

பட்சி உறங்கிருச்சு
பால் தயிராத் தோஞ்சிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்த மக
அரை நிமிசம் தூங்கலையே!

ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!




படம்: கடல்
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சக்திஶ்ரீ கோபாலன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam