Thursday, December 20, 2012

அடியே - கடல்




மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பள்ளம் குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறேனே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

படம்: கடல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்: சிட் ஶ்ரீராம்

நன்றி:http://karky.in

1 Comment:

Gokul said...

I think it is not பல்லாங்குழி It should be பள்ளம், குழி பாதை புரியல !

Last 25 songs posted in Thenkinnam