Thursday, December 20, 2012

சகாயனே சகாயனே



சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசி இன்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன
தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா
தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னை கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து

சகாயனே சகாயனே

கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இது வரை கேட்காத இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட
இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் குடுத்தாயடா
கள்ளப் பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண

சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்

படம் : சாட்டை (2012) 
இசை : இமான் 
பாடியவர் : ஸ்ரேயா கோஷல் 
வரிகள் : யுகபாரதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam