Wednesday, December 12, 2012

நான் பொல்லாதவன்



நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால் நான் என்ன செய்வேனடி
நானுண்டு வீடுண்டு நாடுண்டு வாழ்வுண்டு என்றே தான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி
ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்

படம் : பொல்லாதவன் (1980)
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : பாலசுப்ரமணியம்
வரிகள் : கண்ணதாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam