Saturday, December 15, 2012

பெத்து எடுத்தவதான்

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
தத்து கொடுத்துப்புட்டா

வயிற்றுல வளர்த்த புள்ள வந்து நிக்க வாசலில்லை
மடியிலே வளர்ந்ததுக்கு இங்கிருந்த ஆசையில்லை
மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை
தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை
தோளிலே வாழும் வரை துன்பமுன்னு ஒண்ணுமில்லை
 கட்டில் பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை
சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம்
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்
காவிரி கங்கை ஆறுகள் போல கண்களும் இங்கே நீராட

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதி வைச்ச அந்த விரல் பார்த்தேனா
 கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது
 சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே
சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே
 ரெண்டு கிளியிருக்கு ஒண்ணு தனிச்சிருக்கு
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே காட்டுங்க எங்க தாய்போல

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா
பிள்ளையின் மனசு பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியை கட்டிப்புட்டா

படம் : வேலைக்காரன் (1987)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
வரிகள் : மு. மேத்தா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam