Friday, December 14, 2012

தோட்டத்துல பாத்தி

ஏங்குதே மனம் இன்ப நாளிலே
தூங்குதே ஜனம் இந்த ராவிலே
தாங்குதே குணம் போதை வாழ்விலே
ஏங்குதே தினம் பாடும் பாடலை
ஏங்குதே மனம் தூங்குதே ஜனம்
தாங்குதே குணம் ஏங்குதே தினம்
தினம்

தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம்
மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம்
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம்
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம்
இது தான் நம் தோட்டம்
தோட்டம்

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்

சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே

சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்
கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
 சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா போதை மரத்துல ஏறிக்குவான்

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்

கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
 கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்  கட்டாந்தரை தான் இருக்கு
கல்யாண மண்டபங்கள் கட்டி வைச்சு காத்திருக்கு
கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு
இன்னமும் கதைய சொல்லட்டுமா
குப்பைய கூடையில் அள்ளட்டுமா
இன்னமும் கதைய சொல்லட்டுமா  குப்பைய கூடையில் அள்ளட்டுமா
சொல்வது ஒண்ணு செய்வது ஒண்ணு  பட்டணம் கைகளை சுட்டதண்ணே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடுமே கெட்டுடுமே

படம் : வேலைக்காரன் (1987)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், சைலஜா
வரிகள் : மு. மேத்தா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam