Monday, October 1, 2012

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு!




வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
இங்கு க‌ட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உன‌க்கும் தூக்க‌ம் இல்லை
காசுமில்லை ப‌டிப்புமில்லை
அன்புக்கு ப‌ஞ்ச‌மில்லை
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
க‌ண‌க்கும் புரிய‌வில்லை
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா

தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி
பார்க்க வந்தாயோ
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி
ரசிக்க வந்தாயோ
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
இங்கு தெய்வமொண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்ல கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ


படம் : பத்தாம் பசலி (1970)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன், K.ஸ்வர்ணா
இசை : V குமார்
பாடல் : ஆலங்குடி சோமு

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான இனிய பாடல்...

kankaatchi.blogspot.com said...

எனக்கு பிடித்த இனிமையான பாடல்.

Last 25 songs posted in Thenkinnam