Friday, January 18, 2008

200. மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ...



மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு சுவரம்தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏனடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
(மண்ணில்..)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமின்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடைய்யினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்..)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் ழிவியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
(மண்ணில்..)

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: பாவலர் வரதராஜன்

1 Comment:

இம்சை said...

200 க்கு வாழ்த்து, 2000 சீக்கிரம் அடிங்க...

Last 25 songs posted in Thenkinnam