Thursday, May 1, 2008

400. காலை பனியில் ஆடும் மலர்கள்

**** இது தேன்கிண்ணத்தின் 400-வது பாடல். ஸ்பெஷலா இருக்கட்டுமே என்பதுக்காக சுஜாதாவின் தமிழ் திரையுலகின் முதல் பாடலான காலை பனியில் என்ற பாடலை ஒலியேற்றப்படுகிறது. ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போதே இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல் இது ****



காலை பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்

பார்வையோடு பார்வை சேரும் பாவம் முதலில்
சிறு நாணம் மனதில்
பாவை மேனி தோளில் ஆட ராகம் பிறக்கும்
அதில் தாளம் இருக்கும்
கலைகள் ஆயிரம் அதில் வளரும் காவியம்
சுவை குவியும் நாடகம்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்.. ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்..
(காலை பனியில்..)

காதலாகி கனியும் போது மோகம் வளரும்
என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும் போது தேகம் தனியும்
அதில் நாலும் புரியும்
உறவில் ஆடினேன் புது உலகில் ஆடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்
ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம். ஹ்ம்.. ஒஹோ அஹா..
ஹ்ம். ஹ்ம்.. ஹ்ம்.. ஹ்ம்ம்..
(காலை பனியில்..)

படம்: காயத்ரி
இசை: இளையராஜா
பாடியவர்: சுஜாதா

விரும்பி கேட்டவர்: கானா பிரபா

9 Comments:

ஆயில்யன் said...

தேன் கிண்ணத்திலேயே கிடக்கும் தேனீக்கள் தேன் கிண்ணத்திற்காய் பாடல் தேடி சென்றிருக்கும் தேனீக்கள் என எல்லா தேனீக்களும் வாழ்த்துக்களுடன்!

கோபிநாத் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)))

நிஜமா நல்லவன் said...

மிக பிடித்த பாடல். நன்றி.

நாமக்கல் சிபி said...

400 பாடல்கள் வரை வெற்றிகரமாக கொண்டுவந்த தேன் கிண்ணத்தின் நிர்வாகிகளுக்கும், தேன் பருக வரும் தேனீக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!

கானா பிரபா said...

நா நூறு கண்ட தேன் கிண்ணத்துக்கு வாழ்த்துக்கள் பல

என் தேர்வு போட்டதுக்கு நன்றி நன்றி நன்றி ;-)

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!
//400 பாடல்கள் வரை வெற்றிகரமாக கொண்டுவந்த தேன் கிண்ணத்தின் நிர்வாகிகளுக்கும், தேன் பருக வரும் தேனீக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!//
தற்பெருமைக்கு ஒன்னும் குறைச்சலே இல்லை.

ILA (a) இளா said...

தேன்கிண்ணம் மக்களுக்கு வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//தற்பெருமைக்கு ஒன்னும் குறைச்சலே இல்லை//

:)

இதுல தற்பெருமை எங்கே இருக்கு இளா?

2% பாட்டு கூட நான் போடலை!
எல்லாம் மத்தவங்க போட்டதுதான்!

எல்லாப் பெருமையும் அவங்களுக்குத்தானே!

அப்புறம் ரசிகர்கள்! ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தது அவங்கதானே! அவங்களுக்கும் பங்கு உண்டு இல்லையா!

ரசிகன் said...

நல்லாயிருக்கு:)
நன்றிகள் ஃமைபிரண்டு:)

Last 25 songs posted in Thenkinnam