Thursday, May 22, 2008

455. ஆழக் கடலில் தேடிய முத்து



ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜா கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
(ஆழக் கடலில்..)

மஞ்சலிட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சிரண்டில் தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ண கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(அழக் கடலில்..)

வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டு மரம் சென்றால் என்ன
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சை விட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து
கண்ணே பொண்ணே அம்மா சின்னம்மா
(ஆழக் கடலில்..)

சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்ன தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்ன பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(ஆழக் கடலில்..)

படம்: சட்டம் என் கையில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: இவன்

2 Comments:

இவன் said...

எனது கல்லூரி நாட்களில் இப்பாடலை கேட்டு மகிழ்துள்ளேன். அதன் பிறகு 'தேன் கிண்ணம்' மூலம் இப்பொழுதான் கேட்கின்றேன். இப்பாடலின் MP3 வடிவத்தையும் பகிர்தமைக்கு மிக்க நன்றி.

MyFriend said...

அருமையான பழைய பாடல் இவன். பாட்டும் ரொம்ப அருமையா இருக்கு.. வரிகள் எழுதும்போதுதான் வரிகளை கூர்ந்து கவனிச்சேன். நல்லா இருக்கு. :-)

Last 25 songs posted in Thenkinnam