Tuesday, May 27, 2008

472. செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே



செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே
பாடுங்களேன் கொண்டாடுங்களேன்
ஒரு தோழன் துணைக்கு வந்தான் ஆடுங்களேன்

காற்றும் இவனுக்கு கட்டுப்படும்
இவன் செப்படி வித்தைக்காரன்
தரை வேண்டாம் என்றான்
தலை கீழாய் நின்றான்
தொண்டு கிழங்களும் கண்டு பயப்படும்
காரியம் கற்றுவைத்தான்
இவன் பார்த்தால் போதும்
கடல் பாலாய் மாறும்
இனி நம் வீட்டிலேதினம் தீபாவளி
இங்கு நாம் பாடுவோம் புது கீதாஞ்சலி
அலை நான்கு விளையாடும் கவி பாடி

(செல்லக் குழந்தைகளே)

ஜன்னல் திறந்து ஒரு மின்னல் நுழைந்தது
என்னென்ன விந்தைகளோ
இனி ஊஞ்சல் ஆடு
இது தேவன் வீடு
உண்மை நிலவையும்
பொம்மையென இவன் கைகளில் வைத்திருப்பான்
புது லீலை மன்னன்
இனி எங்கள் அண்ணன்
அந்த ஆகாயமே எங்கள் பாயாகுமே
இனி நாம் தூங்கவே வெகுநாளாகுமே
நம் சொந்தம் எந்நாளும் மாறாதே

(செல்லக் குழந்தைகளே)


படம் : மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம், மாதுரி

***

விரும்பிக் கேட்டவர்: மு. மயூரன்

7 Comments:

நிலாக்காலம் said...

இந்தப் பாடலைப் பார்த்து, 'நாமும் சுவற்றில் நடக்க முடிந்தால் எப்படி இருக்கும்!' என்று கற்பனை செய்ததுண்டு! குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தியதற்கு ரொம்ப நன்றி. :-)

படத்தை முதன்முதலில் தியேட்டரில் பார்த்தபோது 3டி எஃபெக்டில் ஐஸ்க்ரீமைப் பார்த்து கை நீட்டியதையும், மந்திரவாதியையும் வெளவாலையும் பார்த்து அலறியதையும் மறக்க முடியவில்லை. :))

இதே படத்தில் இருந்து 'பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா' என்ற பாடலையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. :-)

நிலாக்காலம் said...

சின்ன மாற்றங்கள்:
***
தொண்டு கிழங்களும் கண்டு பயப்படும்
காரியம் கற்று வைத்தான்
***
உண்மை நிலவையும் பொம்மையென இவன் கைகளில் வைத்திருப்பான்
***
அந்த ஆகாயமே எங்கள் பாயாகுமே
***

கப்பி | Kappi said...

நிலாக்காலம்

// 'பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா' //

அடுத்து வந்துட்டேயிருக்கு :))


பாடல் வரிகளில் தவறுகள் திருத்தியாச்சுங்க!! நன்றி!!

G.Ragavan said...

கப்பிஸ்ரீ, இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படியே சின்னக் கொழந்தை மலரும் நினைவுகள் வந்துருச்சு. :((((((((((((((((((((

வாணி ஜெயராம் அழகாப் பாடியிருப்பாங்க. கூடப்பாடிய மலையாளப் பாடகி மாதுரி குளந்தைகலேன்னு பாடியிருப்பாங்க :) இவங்களுக்குப் பதிலா பி.எஸ்.சசிரேகா மாதிரி நல்ல தேர்ந்த பாடகியைப் பாட வெச்சிருக்கலாம்.

vasu devan said...

பாடலை வாணியுடன் பாடியது சுஜாதா மோகன்

vasu devan said...

பாடலை வாணியுடன் பாடியது சுஜாதா மோகன்

vasu devan said...

பாடலை வாணியுடன் பாடியது சுஜாதா மோகன்

Last 25 songs posted in Thenkinnam