எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே
தொல்லை மிகு இவ்வுலகில் சுகமில்லையே....
ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் (2)
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும் --- (எல்லாம் ஏசுவே)
தந்தைதாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகல யோக சம்பூர்ண பாக்யமும்
கவலையில் ஆறுதல் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய் படுக்கையிலே கைகண்ட ஔஷதமும் (எல்லாம் ஏசுவே)
போதகப்பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடும் கூட்டாளியுமென் தோழனும் ( எல்லாம் ஏசுவே)
ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்( எல்லாம் ஏசுவே)
பாடியவர் : ஜிக்கி
0 Comments:
Post a Comment