சந்தன மல்லிகையில் தூளி கட்டிபோட்டேன்
தாயி நீ கண் மலரு தானே லல்லேலோ
வேப்பிலை வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண் மலரு தானே லல்லேலோ
இந்த உலகை ஆளும் தாய்க்கு
செல்ல பிள்ளை நானிருக்கேன்
கவலை தீர்க்க வேணாமா
கண் மலரு தாயி..
(சந்தன மல்லிகையில்..)
பாம்பே தலையணைதான் வேப்பிலையே பஞ்சு மெத்தை
ஆத்தா கண் மலர ஆரிரரோ பாடும் பிள்ளை
எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுக்குள்ளே!
தாயீ மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திரு பாதம் அதை நெஞ்சில் எடுத்து வச்சேன்
(சந்த மல்லிகையில்..)
ஒரு வாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில
உலகம் பசியடங்கி உறங்குதம்மா நேரத்தில
உதட்டு பருக்கையில ஒன்ன் ரெண்டு சிந்துதடி
அதை நான் ருசி பார்த்தேன் மோட்சம் இங்கு வந்ததடி
தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு
போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு
(சந்தன மல்லிகையில்...)
படம்: ராஜகாளியம்மன்
இசை: தேவா
பாடியவர்கள்: ஸ்வர்ணலதா,
விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி துர்காவுக்காக இந்த பாடலை விரும்பி கேட்கிறார்.
Saturday, May 3, 2008
ராஜகாளியம்மன் : சந்தன மல்லிகையில்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஒரே பீலிங்கா இருக்கு. சிபி அண்ணா நல்ல பாட்டு தான் கேட்டு இருக்கீங்க.
தேசமெல்லாம் பேசுகின்ற ராஜகாளியம்மனுக்கு என்ற எஸ்.பி.பி பாடிய பாடல் இந்த படத்திலயா?கொஞ்சம் சொல்லுங்க சார்.
Post a Comment