தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத் துளியே
(தொடுவேன்..)
ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்ணின் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ என்ன நீ
பூவில் பூத்திருக்கும் பனியா நீ
மௌனக் கூச்சலிடும் இசையா நீ
முத்தம் சேகரிக்கும் முகமா நீ
தூண்டில் பார்வையால் தொலைந்து விட்டேன்
ஆசை அலைகள் மனசுக்குள்
மெல்ல மெல்ல வீசுதடா
ஆனால் இதழ்கள் வயிற்றினில்
உண்மை சொல்ல கூசுதடா
(தொடுவேன்..)
கண்ணால் காதலினை மெதுவாய் சொல்
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்
சொல்லடி சொல்லடி
பாதி ராத்திரியில் விழித்தேனே
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே
ஊஞ்சல் மேகமாய் பறந்து விட்டேன்
உன் போல் இவளின் விழிக்குள்ளே
தூக்கம் தூக்கம் இல்லையடா
ஏனோ இதயம் அடிக்கடி
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா
(தொடுவேன்..)
படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், மாயா
விரும்பி கேட்டவர்: விக்னேஸ்வரன் அடைக்கலம்
1 Comment:
சூப்பர்...
Post a Comment