நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல
நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு
தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே
கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது
நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ
அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல
படம்: சின்ன தாயி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா
விரும்பி கேட்டவர்: மசூட்
Monday, May 19, 2008
446. நான் ஏரிக்கரை மேலிருந்து
பதிந்தவர் MyFriend @ 5:14 PM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, ஸ்வர்ணலதா
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
// நான் மாமனுக்கு தென்கிழக்கிருந்து முன்னும் பின்னும் //
திருத்தம்
நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்...
//
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
//
நிச்சயமாக தெரியவில்லை எனக்கென்னவோ இவ்வாறு கேட்டது
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல...
@கருப்பன்:
//நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்...//
திருத்திட்டேன். நன்றி..
இரண்டாவது எனக்கு
//
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
//
போலத்தான் தெரியுது. இன்னொரு முறை கேட்டு பார்க்கிறேன். :-)
ஏந்திழைக்கு is right !
ஏந்திழைக்கு is right !
மிகச்சரியாக சொன்னீர்கள். ஏந்திழை என்பது ஒரு அற்புதமான வார்த்தை பிரயோகம். இதனை இன்னொரு பாடலிலும் இளையராஜா அவர்கள் எழுதியுள்ளார். "மணியே மணிக்குயிலே" எனும் பாடல் .நாடோடி தென்றல் என்ற ஒரு படம் (கார்த்திக் உடன் ரஞ்சிதா நடித்தது)
படம் : நாடோடி தென்றல்
பாடல் : மணியே மணிக்குயிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ
கண்ணிமையில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே
இதுபற்றி என்னுடைய ஒரு விரிவான அலசல் http://loginramanan.blogspot.com/2016/07/blog-post.html என்கிற வலைப்பூவில் தரப்பட்டுள்ளது
தங்களுடைய முயற்சி மற்றும் உயர்ந்த நோக்கங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மேலும் வாழ்த்துக்கள்
Post a Comment