Saturday, May 3, 2008

406. அடடா அடடா அடடா

நடிகர், கதாசிரியர், பாடகர் என்று ஓவ்வொரு படியாக முன்னேறிவரும் இளம் நாயகன் சித்தார்த் பாடிய பாடல். யூ டியூப் வீடியோவிலும் அவரே. :-)



அடடா அடடா அடடா
என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
(அடடா..)

நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்தபோது
எந்த கறுப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
உன் வாசம் உன் வாசம் எங்கேன்னு கேட்குதடி
(அடடா..)

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக அர்த்தங்கள்
(அடடா..)

படம்: சந்தோஷ் சுப்ரமணியம்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சித்தார்த்

6 Comments:

நிஜமா நல்லவன் said...

மை பிரண்ட் அவங்களுக்காக போட்டுகிட்ட பாட்டு. கண்டுக்காதீங்க.

ILA said...

நல்ல பாட்டு.. ஆனா ஜெயம் ரவிதான் நடிச்சாரு, இவரு யாரு புதுசா ரீமிக்ஸ்க்கு வர மாதிரி..ஏதாவது விளம்பரத்துல நடிக்கிறவரா?

ஆயில்யன். said...

ஹய் நல்லா இருக்கு!

ஹாசிணி போட்டோ :)))))))))))

ரசிகன் said...

இந்த ஒரு படத்துல தான் அந்த சித்து பையன் கொஞ்சம் பாக்கறாப்பல இருக்கான். ஒருவேளை ஜெனிலியா அங்க இருக்கறதால பூவோட சேர்ந்த நாரும் மணமணக்கும்ங்க்ற மாத்ரி ,அப்படி தெரியறானோ?.

(பின்ன தனியா அவன் நிக்கற போஸ்செல்லாம் எங்க ஃமைபிரண்ட தவிர வேற யாராலும் சகிச்சுக்க முடியாதில்ல:P)

பாட்டும் நல்லாயிருக்கு:)

மங்களூர் சிவா said...

we r sorry
this video link no longer available.

You tube

புதுகைத் தென்றல் said...

"BOMMARILLU" ITHODA 20 thadava pathutten. super. (cd vaangitomla)

jeyam ravi konjam vayasana mathirithan theriyarar. siddarth super. myfriendku thalela ice vacha maathiri irukkume :))))))))))))

Last 25 songs posted in Thenkinnam