பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
ஆண்: இளைய கன்னிகை மேகங்களென்னும்
இந்திரன் தேரில் வருவாளாம் ( நாளாம் நாளாம் )
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்ஆஆ.... ஆஆ..ஆஆ
பெண்:மணமகன் இன்ப ஊஞ்சலில்
ஆண்:மணமகள் மன்னன் மார்பினில்
பெண்:அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
ஆண்:அது காதல் தேவனின் காவியம்
பெண்:அதில் ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்
ஆண்:இருவர் ஊடலே பாடலாம்.
இருவரும் :ஓ ஹோ ஓ ஹோ ஆ ஆ
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்
ஆண்: இளமையின் இன்ப ரகசியம்
பெண்:இயற்கையில் வந்த அதிசயம்
ஆண்:இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
பெண்:அதில் நாமும் இன்றொரு காவியம்
ஆண்:இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்
இருவர் காதலும் மாறுமோ?
ஆ ஆ ஆஆஆ
இருவரும் : நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளைய காதலர் மேகங்களென்னும்
இந்திரன் தேரில் வருவாராம்
நாளாம் நாளாம் திருநாளாம்..ஆஆஆஆ
பாடலைப்பாடியவர்.. பி சுசீலா ..பி ஸ்ரீநிவாஸ்
திரைப்படம், : காதலிக்க நேரமில்லை.
இசையமைப்பாளர்: எம்.எஸ்.வி.
Saturday, May 17, 2008
440. நாளாம் நாளாம் திருநாளாம் ...
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 6:38 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
பதிவு போடறதுக்கு வேற எதுவும் கிடைக்கலிங்களா?!
http://tvmalaionline.blogspot.com/2008/05/blog-post_9209.html
ஜிம்ஷா நீங்கள் என்னுடைய சிறுமுயற்சி தளத்தையும் இந்த தேன்கிண்ணம் தளத்தையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்.. இங்கே இப்படித்தான் பதிவு போடவேண்டும்.. அதுவும் இந்த வாரம் இரு பதிவர்களின் அதுவும் தேன்கிண்ணம் பதிவில் இணைந்து செயல்படும் அவர்களின் திருமண சிறப்புவாரம் .. கல்யாணப்பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது..
மற்றும் பல விசயங்களை படித்து பதிவு போடத்தான் நீங்கள் வந்துவிட்டீர்களே ! :-)
Post a Comment