பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஓ
காட்டைத் திறக்கும் சாவிதான் காற்று
காதைத் திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஒ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஒ
நீயென்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல்தான்
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள் செய்வது பாடல்தான்
கடவுளும் கந்தசாமியும் பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்
மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்
எண்ணிப் பாரடா மானுடா
என்னோடு நீ பாடடா
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஒ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஒ
பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழ் நாட்களே
ஆனாலும் தேன் தந்துதான் போகுதே
நம் வாழ்க்கையும் வாழ்நாளை யார் கண்டது
என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே
வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்
காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வலிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை
உன் மௌனமும் மெல்லிசை
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஒ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஒ
படம்: தசாவதாரம்
பாடல்: வைரமுத்து
இசை: ஹிமேஷ் ரேஷ்மய்யா
பாடியவர்:கமல்ஹாசன், மகாலட்சுமி ஐயர்
1 Comment:
பாடல் வரிகள் ஒண்ணும் பெருசா கவித்துவமா ஒண்ணும் இல்ல. ரொம்ப சுமார் தான். அனைத்திலும் கவனம் செலுத்தியவர்கள் இசையில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பது என் எண்ணம்.
Post a Comment