Sunday, May 18, 2008

443. நாந்தான் மாப்பிள்ளே

இன்று (18/05/2008) சுபயோக சுபதினத்தில் திருமண பந்தத்தில் இணையும் அண்ணன்-அண்ணி பரணிதரன் - விஜயபாரதி தம்பதிக்கு இவ்வேளையில் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு, அண்ணனுக்காக தேன்கிண்ணம் ஸ்பெஷலா ஒரு பாடல் ஒளியேற்றுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பாடலில்? பாடல் வரிகளை படித்து பாடலுடன் கேட்டு பாருங்க. ஒரு புது மாப்பிள்ளை பொண்ணை பார்க்க போறதிலிருந்து திருமணம் வரை நடக்கும் கலாட்டாவை ஒரு பாடலிலேயே அருமையா சொல்லியிருப்பாங்க.. ஜாலியான அண்ணனுக்கு ஏற்ற பாடல். Enjoy! ;-)நாந்தான் மாப்பிள்ளே
நான் பொறந்த நாட்டிலே ஊ..
நாந்தான் மாப்பிள்ளே
நான் பொறந்த நாட்டிலே

சூப்பரான பொண்ணு ஒன்னை தேடி
கைப்பிடிப்பேன் பாட்டு ஒன்னை பாடி
உனக்கு நல்ல பொருத்தமான ஜோடி
வாச்சிருக்கு நூத்துல ஒரு கோடி

காரு இங்கே ஊருது
நல்ல நேரம் போகுது தம்பி தம்பி
உங்க மாருதி சுஸூகிக்கு
மாடு எதற்கு ஏ அன்பு தம்பி
(நாந்தான்..)
நீதான் ரோட்டிலே
பொண்ணு அங்கே வீட்டிலே

ஏ.. மாட்டு வண்டியில மாப்பிளை வந்தாச்சு
மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார்
மாட்டு வண்டியிலே

அப்படியா..
மாப்பிளைக்கு தண்ணியை காட்டு
மாட்டுக்கு காப்பி கொடு
ஆ...
மாப்பிளைக்கு காப்பி கொடு
மாட்டுக்கு தண்ணியை காட்டு

மாப்பிளைக்கு தண்ணீ கொடுத்தா என்ன
காப்பி கொடுத்தா என்னப்பா
சந்தோஷத்துல தாத்தாவுக்கு ஒன்னும் புரியல ஹேஹே..

மாப்பிளை கெடந்து துடிக்கிறாரு
அட பொண்ணை வர சொல்லுங்க

தாத்தா பொண்ணை வர சொல்லுங்க

பொண்ணு கொஞ்சம் ஏஜேட்டா இல்ல?
அது என் சித்தி மாப்பிள்ளை

ஓ.. பாட்டு வருமா?
பொண்ணுக்கு பாட்டு வருமா?

பாக்கியலெட்சுமி.. ம்ம்ம்..

மியா மியா பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
அத்தான் மனசு வெல்லக்கட்டி
அவர் அழகு சொல்லடி செல்லக்குட்டி

நல்ல சகுனம்..
பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா
பாட்டே பாடி காட்டிட்டா போங்கோ

ஐயோ!

சீதா தேடும் ஸ்ரீராமன் நீயே
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே
பூலோகமே கொண்டாடும் ராஜாதி ராஜன்
(சீதா தேடும்..)

புள்ளைக்கு என்ன கொடுப்பீங்க?
நிசமக பம நிப சநி சநி பமக
புள்ளைக்கு என்ன கொடுப்பீங்க?
அப்படி போட்டு தாக்கு தாக்கு தாக்கு
தரிங்கதத்தோம்..

என்ன இப்பவே தரிங்கதத்தோமா?

பாப்பா இவ சின்ன பாப்பா
ஏன்ப்பா என்னை என்ன கேட்பே?

மாமா கிண்டல் பண்ணலாமா?
மாமி அஞ்சு லட்சம் கேட்கலாமா?

அழகான மாப்பிள்ளே
அய்ய்யய்ய்ய்யா..
அஞ்சு லட்சம் கேட்குறான்

அழகான பொண்ணு இருக்கு இந்தா
நீ அஞ்சு லட்சம் கேட்குறது பந்தா

யாராவது அழகான பொண்ணையும் கொடுத்து
அஞ்சு லட்சம் பணமும் கேட்பாங்களா?

சரி விடுங்க..
பொண்ணை நீங்க வச்சிக்கோங்க
அஞ்சு லட்சம் பணத்தை மட்டும் கொடுங்க

பொண்ணை பிடிச்சு போச்சு
அது புடிச்ச பின்னும்
எதுக்கு இனி வெட்டி பேச்சு
திருப்பதி லட்டுதான்...
திருப்பதி லட்டுதான்
செட்டி நாட்டு புட்டுதான்
இழுத்து வளைச்சு மயக்கி சிரிக்கிற
சிறு பொண்ணை பிடிச்சு போச்சு
எதுக்கு இனி வெட்டி பேச்சு

கானவந்த காட்சி என்ன வெள்ளிநிலவே நீ
கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளிநிலவே

அருகில் வந்தாள் அதட்டி நின்றாள்
கொண்டு போனாளே

ஒளிமயமான அரை பாட்டில்
என் பாக்கேட்டில் இருக்கிறது
இந்த கிழவி போடும் கூச்சல் இனிமேல்
காதில் கேட்காது

டேய்.. விடிஞ்சிடுச்சுடா
எழுந்திரிங்க.. எழுந்திரிச்சு வாசிங்க..

ஏய்.. முகூர்த்தம் பத்தறை மணிக்குடா..
பொண்ணு அழைப்புக்கு வாசிங்கடா

நிலவா நிலவா இங்கு நடந்து வருவது
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது
பூலோகமே கொண்டாடும் நாளிந்த நாளிது
(நிலவா..)

புள்ளாண்டனை சுத்தி வாப்பா
தூக்கம் இன்னும் போகலைப்பா
அப்படி போட்டு தாக்கு தாக்கு தாக்கு
தரிங்கதத்தோம்..

என்ன இப்பவுமா தரிங்கதத்தோம்?

நட்ட நடு ராத்திரியில்
கொட்ட கொட்ட முழிச்சிருந்தே
தாலி கட்டும் நேரத்திலே தூங்கிவிடாதே

ஐயரே மந்திரத்தை சொல்லுப்பா

சர்வ மங்கள மாங்கல்யே
சர்வார்த்தக சாதகே

ஐயரே மந்திரம் பத்திரம்

என்ன மாமா?
பொண்ணு ஜாக்கேட் போடாம
கவர்ச்சியா இருக்கு?

அது ஐயர் மாப்பிளை
தூக்கத்துல தாலியை மாத்தி கட்டிடாதே

நீதான் மாப்பிள்ளே
பொண்ணு கிட்ட மாட்டிக்கிட்டே
இப்போ என்ன கல்யாணம்ன்னா லேசா?
அடேயப்பா
தண்ணி போல செலவழிக்கணும் காசா
ஆமாய்யா என் ராசா
பொண்ணை பெத்துட்டா
பொறந்த வீட்டுக்கே பாரம்தாண்டா

மாப்பிள்ளை கெடச்சிட்டான்
கைபிடிச்சு கொடுத்துட்டான்
நேரம்தாண்டா

கல்யாணமாம் கல்யானம்
இது சூப்பரான கல்யாணம்
கல்யாணமாம் கல்யானம்
இது சூப்பரான கல்யாணம்

படம்: தொடரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, மலேசிய வாசுதேவன், கங்கை அமரன், ரமேஷ் கண்ணா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam