Wednesday, May 14, 2008

433. மாலை சூடும் மண நாள்

மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வினில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை ( மாலை சூடும்)

ஆஆஆஆஆஆ

காதல் கார்த்திகைத் திருநாள்
மனம்கலந்தால் மார்கழித்திருநாள் ( காதல் கார்த்திகை)
சேர்வது பங்குனித்திருநாள்
நாம் சிரிக்கும்நாளே திருநாள் ( மாலைசூடும்)

ஆஆஆஆஆஆ

மங்கலக்குங்குமம் போதும்
திருமலரும் மணமும் போதும் ( மங்கலக்குங்குமம்)
பொங்கிடும் புன்னகை போதும்
மனம் புதுமணத்திருநாள் காணும்..( மாலைசூடும்)

மாலை சூடும் மணநாள்
இள மங்கயின் வாழ்வினில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை



பாடியவர்: பி.சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

படம்: நிச்சயதாம்பூலம்

6 Comments:

நாமக்கல் சிபி said...

அருமையான பாடல் முத்துலட்சுமி அக்கா!

மண விழா காணும் வேதா மற்றும்

இல்லத்தரசியாகப் போகும் இம்சை அரிசிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி.. சிபி...

அதென்ன அரசியை அரிசியாக்கிட்டீங்க..

Anonymous said...

நாமக்கல் சிபி அண்ணா காணாமப்போயிருந்தார். இப்ப நீங்க இந்த பாட்ட போட்டு கண்டுபிடிச்சிட்டீங்க கயல்விழி, பாட்டு நல்ல நேரத்துல தான் போட்டிருக்கீங்க. பதிவுலகத்தில ரெண்டு பேருக்கு கல்யாணம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அந்த திருமணங்களுக்கான சிறப்பு வாரத்தில் கல்யாணப்பாட்டா போடனுன்னு சொன்னாங்கன்னு தான் இந்த பாட்டே.. சின்ன அம்மிணி..

நானானி said...

சுகமான பாடல்! என் சின்னக்கா சின்னண்ணன் கல்யாணத்தில் நலங்கில் பாடியது ஞாபகம் வருதே!
இம்சை அரசி இல்லத்தரசியாகப் போகிறாரா? வாழ்த்துக்கள். இனி அரிசி களைந்து சோறாக்கணும் அல்லோ?
அதனால்தான் சிபி அரசியை அரிசியாக்கிவிட்டார் போலும்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நானானி .. நல்ல காரணம் சொன்னீங்க.. அரிசைய மாப்பிள்ளை களைஞ்சு தரமாட்டாரான்னு கேப்பாங்க இம்சை.. :)

Last 25 songs posted in Thenkinnam