Wednesday, May 21, 2008

451. என் உயிர் தோழியே




என் உயிர் தோழியே
என் உயிர் தோழியே
என் உயிர் தோழியே
என் உயிர் தோழியே

என் உயிர் தோழியே நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
என்னுள்ளே நடந்தது என்ன என்ன
இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே
உன் விழிகள் இங்கே புதிய உலகமொன்றை திறந்ததே
ஓ..

ஒற்றை ஜடையில் உன்னை கட்டி இழுத்து வந்து வைப்பேன்
எனது கள்ளச் சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா
என்னை நீயும் தான் பார்த்துக்கொள்வாய்
கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா?
என்னை வந்து நீ கண்டுக் கொள்வாய்
ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு
போ போ என் ஆசை தீர்ந்தது
(என் உயிர் தோழியே..)

கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிணுங்குகிறாய்
ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ
நீ என்னவோ சிலிர்ப்புகிறாய்
ஒரு கப்பல் போலே உன்னை ஊதி சென்றேன்
துறைமுகமும் நானே உடனே தானே
தூள் தூள் தூள் ஆனது உண்மை
(என் உயிர் தோழியே...)

படம்: கண்களால் கைது செய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிமேனன், சின்மயி
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: விக்னேஸ்வரன்

2 Comments:

Abarna said...

//பிழையுள்ள 2 வார்த்தைகள் உள்ள வரிகள்.

கத்தி வைத்த தங்கம் ஒன்றை பார்த்ததுண்டா
என்னை நீயும்தான் பார்த்துக்கொள்வாய்
கத்தி வீசும் வானவில்லை பார்த்ததுண்டா?
என்னை வந்து நீ கண்டு கொள்வாய்


//சரியான வரிகள்...
கத்தி வைத்த தங்கம் மீனை பார்த்ததுண்டா
என்னை நீயும்தான் பார்த்துக்கொள்வாய்
கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா ?
என்னை வந்து நீ கண்டு கொள்வாய்

நாகை சிவா said...

தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா
என்னை நீயும் தான் பார்த்துக்கொள்வாய்
கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா?
என்னை வந்து நீ கண்டுக் கொள்வாய்

சரி செய்யப்பட்டது. நன்றி.

Last 25 songs posted in Thenkinnam