Thursday, May 8, 2008

419. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது




கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் கழியாது
அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனர் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்



இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீரவைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது

ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்



நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா

சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

( கல்லை மட்டும் கண்டால் )



படம்: தசாவதாரம்
இசை: ஹிமேஷ் ரேஷ்மய்யா
பாடல்: வாலி
பாடியவர்: ஹரிஹரன்

விரும்பிக் கேட்டவர்: உதயகுமார்

3 Comments:

Udhayakumar said...

நன்றி!!!

ஆயில்யன் said...

//ஊனர் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்///

நல்லா இருக்கு :))

MyFriend said...

சூப்பர் அறிவுஜீவி. :-)

Last 25 songs posted in Thenkinnam