அரங்கேற்றம் படத்தில் P.சுசிலா பாடிய அருமையானதொரு பாடல் இது. கவிஞர் கண்ணதாசன் வரிகளில் படத்தின் கதையை கதாநாயகியின் கண்ணோட்டத்திலே சொல்லவரும் அருமையான வரிகளை கொண்ட பாடல்.
ஆண்டவன் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது.
ஆண்டவன் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது.
வேண்டுமட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன்.
அந்த விதியை கூட சிரிப்பினால் விரட்டியடிப்பேன்.
(ஆண்டவன் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது.)
குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு
அதே குமரிபொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்காக பரிசுதான் இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த சலுகையல்லவா
லலாலாலாலா,வசமா இதமா சிரிச்சா சுகமோ
(ஆண்டவன் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது.)
குளமா குளமா தவமிருந்து கொக்கு சிரிக்குது.
அது கொத்தப்போவதை மறந்து மீனும் சிரிக்குது.
குளத்தை விட்டு கரையேலறி நண்டு சிரிக்குது.
அதை கொண்டுபோய் உண்டுப்பார்க்க நரியும் சிரிக்குது.
லலாலாலாலா,வசமா இதமா சிரிச்சா சுகமா..
(ஆண்டவன் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது.)
படம்:- அரங்கேற்றம்
பாடியவர்:- P.சுசிலா
பாடல்:- கவிஞர் கண்ணதாசன்.
Tuesday, May 6, 2008
414.ஆண்டவன் தோட்டத்திலே அழகு சிரிக்குது
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
was it not L.R.
Eswari
Post a Comment