இசை உலகில் 65 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற திரு.வி.ராஜு அவர்கள் 84 வயதில் சமீபத்தில் இயற்க்கை எய்தினார். வீணை, மாண்டோலின், சிதார், சந்தூர் வாசிப்பதிலும் மற்றும் கொன்னக்கோல் சொல்வதிலும் வல்லவர். இந்த பாடலில் திரு. எம்.ஆர்.ராதா அவர்களுக்கு ஜதி சொல்வது அவர் தான் இந்த பாடல் “பலே பாண்டியா” என்ற படத்தில் வருகிறது. திரு. டி.எம்.எஸ் அண்ணா அவர்கள் நடிகர் திலத்துக்கும் பாடியிருப்பார். படக்காட்சியில் எம்.ஆர்.ராதா அவர்களின் சேஷ்டைகளை ரசிக்காதவர் எவரும் இருக்கமாட்டார்கள். ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். நீங்களூம் கேளுங்கள்.
|
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
கருணை...கருணை...கருணை...கருணை...
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
விணை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்றதை மலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ...
துதி பாடும் ...துதி பாடும் ...துதி பாடும் ... பாடும் பாடும் டும் டும்..
துதி பாடும் ...
(ஜதிகள் பாடுவது எளிது போலும் தட்டச்சு செய்வது சிரமம்ப்பா...)
3 Comments:
அருமையான பாடல்.. திரு.ராஜு அவர்களைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பதிந்தமைக்கு நன்றி..
:) பிடிச்ச பாட்டு ரவிஜி..
//(ஜதிகள் பாடுவது எளிது போலும் தட்டச்சு செய்வது சிரமம்ப்பா...)/
LOL ;)
சுத்த தன்யாசி என்கிற ராகத்தில் அமைந்த பாடல் இது. இதே ராகத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி அளித்திருக்கும் இன்னொரு பாட்டு, படகோட்டியில் வரும் தொட்டால் பூ மலரும்... என்ற பாடல்.
Post a Comment