Wednesday, May 21, 2008

453. பச்சைக்கிளி பாடும் ஊரு




பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புள்ள பாரு
மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டையாட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
(பசு மாட்டுக்கு..)
(பச்சைக்கிளி..)

தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போலே
ஊரு கதை பேசிக்கொண்டு நதி நடக்கும்
பச்சைக்கிளி மெல்ல பல்லவியே சொல்ல
குயில் வந்து சரணத்தில் குரல் கொடுக்கும்

கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கும் தினம் தினம்
தேரோட்டம் அட பட்டணத்தில் இல்லை இந்த
காற்றோட்டம் அந்த நந்தவன பூவே
நாக்காலி அதில் அமர்வேன் வண்டாட்டம்
(பச்சைக்கிளி..)

குட்டை காம தேவர் கட்டி வச்சதம்மா
கூதல் வரும் முன்னாலே குளிக்கட்டுமா
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே
ஒத்தையிலே நானாக நடக்கட்டுமா

சங்கீதம் எங்கே கோழி
ஆடு கத்தும் சத்தம் சங்கீதம்
கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோஷம்
எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும் பூ வாசம்
அந்த சுகமோ பரவசம்
(பச்சைக்கிளி..)

படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷாஹுல் ஹமிட், மின்மினி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam