சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே
சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே
தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற போது
பத்து விரல் பத்தாது
கனவா இவள் காதலியா
மனதை கிள்ளும் மனைவியா
காதல் ஒற்றை கண்ணில்
காமம் ஒற்றை கண்ணில்
எந்த கண்ணால் என்னை பார்க்கிறாய்
கண்ணா கண்ணா
காமம் காதல் ரெண்டும்
எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னை காண்கிறேன்
கண்ணே கண்ணே
நீ வேறு நான் வேறு
நாம் வேறு நாம் வேறு பூவும் ஆவோம்
நீ என்னை வளைக்காதே
நான் கேள்வி குறி ஆகி போவேனே..
சிற்பம் போல வாழ்ந்தேன்
என்னை செதுக்க வந்தாய்
மீண்டும் பாறை ஆவேன்
நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
தொட்டில் செடி ஆனேன்
தோட்டம் வந்து சேர்ந்தேன்
காம்பை தீண்டும் வேலை
கைகளில் விழுந்தேன் கண்ணா
உன் வாயால் என் பேரை
நான் உச்சரிக்க வேண்டும்
உன் தீயால் என் சேலை
தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே..
(சகலகலா வல்லவனே...)
படம்: பம்மல் K சம்பந்தம்
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: கபிலன்
Monday, May 26, 2008
468. சகலகலா வல்லவனே
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment